எண்ணற்ற மருத்துவ பயன்களை தரும்காலிஃபிளவர் இலைகளை சமைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
காலிஃபிளவர் பூவின் மூலம் சில்லி, குழம்பு, பொரியல் உள்ளிட்ட உணவுகளை பலரும் விரும்பி ருசித்து சாப்பிடுவோம். ஆனால், நாம் வழக்கமாக காலிஃபிளவரில் உள்ள பூக்களை மட்டுமே எடுத்து சமைத்து சாப்பிடுவோம். அதனை சுற்றி உள்ள இலைகளை எடுத்து குப்பையில் வீசி விடுகிறோம். இதுமட்டுமல்லாம், சந்தைகளிலேயே அதன் இலைகளை வெட்டி எடுத்து விட்டு தான் வீட்டுக்கு எடுத்து செல்வோம். ஆனால் இப்படி தூக்கி எறியப்படும் காலிஃபிளவர் இலைகள் காலிஃபிளவர் பூக்களுக்கு இணையான பல்வேறு ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கியதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலிஃபிளவரில் இருப்பதை விட காலிஃபிளவர் இலைகளில் அதிக அளவிலான ப்ரோட்டீன்கள் காணப்படுகிறது.
மேலும் இதில் அதிக அளவிலான மினரல்ஸும் உள்ளது. இவைகள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதனை ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தினமும் சமைத்து சாப்பிட தரலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு தருவதால் அவர்களின் எடை,உயரம் மற்றும் ஹீமோகுளோபின் அளவில் நல்ல முன்னேற்றம் காணப்படும் .இதிலுள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதுவுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்திகிறது. தவிர போஸ்ட்மெனோபாஸினால் உண்டாகும் பிரச்னைகளை குறைக்கும் தன்மை கொண்டது.
இதிலுள்ள வைட்டமின் ஏ கண்ணின் ஆரோக்கியத்தினை பராமரிக்கவும் மேலும் மாலைக்கண் நோய் ஏற்படும் ஆபாயத்தை தடுக்க பயன்படுகிறது என்று பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலிஃபிளவர் இலைகளில் அதிகமாக காணப்படும் மற்றொரு முக்கிய ஊட்டச்சத்து நார்ச்சத்து ஆகும். இந்த நார்சத்து செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு பெரிதும் துணை புரிகிறது. மேலும் இதனை உடல் எடையை குறைக்க விருப்புபவர்கள் இதனைதொடர்ந்து உணவில் எடுத்து வந்தால் உடலை இருக்கும் தேவையற்ற கழிவுகளை உடம்பில் இருந்து வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துவதுடன் உடல் எடையை குறைக்கும் பணியை சிறக்க செய்கிறது.