சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்த 13 வயது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். எதிர் தரப்பில் பேசிய ஆண் நபர் சிறுமியை அயனாவரம் பேருந்து நிலையத்தில் விட்டுச் செல்வதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்ட காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் சிறுமிக்கும், சிறுவனுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளதையும், இதன் மூலம் சிறுமி அந்த சிறுவனை நம்பி சென்றதும் தெரியவந்துள்ளது. அதன் பின்னர், சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை கைது செய்த போலீசார், அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமிக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.