fbpx

கவனம்…! நாளை தான் கடைசி நாள்…! ஹஜ்‌ யாத்திரைக்கு உடனே விண்ணப்பிக்கவும்…!

ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் நாளை வரை விண்ணப்பிக்கலாம்.

ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஹஜ்‌ குழு மூலம்‌ ஹஜ்‌ 2023-ற்காக விண்ணப்பிக்கும்‌ முறை 10.02.2023 முதல்‌ ஆன்லைனில்‌ தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்தை இந்திய ஹஜ்‌ குழு இனையதளம்‌ மூலம்‌ அதாவது https://hajcommittee.gov.in/ என்ற இணையம்‌ வழியாக (அல்லது) மும்பை ஒந்திய ஹஜ்‌ குழுவின்‌ ‌செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில்‌ பதிவிறக்கம்‌ செய்வதன்‌ மூலம்‌ விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்‌. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை முடிவடைய உள்ளது.

இந்த ஆண்டு, ஹஜ்‌ பயணிகள்‌ சென்னை புறப்பாட்டுத்‌ தளத்திலிருந்து ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ளலாம்‌. வாழ்நாளில்‌ ஒருமுறை மட்டும்‌ இந்திய ஹஜ்‌ குழு மூலமாக ஹஜ்‌ பயணத்தை மேற்கொள்ளலாம்‌ என்னும்‌ விதிமுறையை இந்திய ஹஜ்‌ குழு செயற்படுத்தி வருகிறது. ஹஜ்‌ 2023-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ்‌ குழுவின்‌ இணையதள முகவரி https://hajcommittee.gov.in/ மூலம்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

வாட்டி வதைக்க தயாராகும் வெயில்..!! ஏசியை இப்படி பயன்படுத்தாதீங்க..!! கரண்ட் பில் எகிறிடும்..!!

Sun Mar 19 , 2023
வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறையும் விரைவில் விடப்படும். நாள் முழுவதும் குழந்தைகள் ஏசி ரூமை விட்டு வெளியில் வரவே வராது. சிலர் பழைய ஏசியை சர்வீஸ் பண்ணி தயாராக வைத்திருப்பீர்கள். இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக புது ஏசியில் தான் நல்ல குளிர் என கூறி ரூமுக்கு புது ஏசியை மாட்டி விடுவர். என்னதான் […]

You May Like