fbpx

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!! ஐபிஎல் தொடரை காண ரசிகர்களுக்கு தடை..? முக்கிய அறிவிப்பு

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முந்தைய 3 ஐபிஎல் சீசன்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-பபுள் சூழலில் நடந்தது. பல்வேறு கட்ட பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், நடப்பாண்டு ஐபிஎல் சீசனை கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அதன்படி, எந்த அணி வீரருக்காவது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் உடனடியாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். தனிமைப்படுத்தலின் போது அந்த வீரர் அணியிருனருடனோ, ஊழியர்களுடனோ இருக்க அனுமதிக்கப்படமாட்டார். கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரருக்கு 5 நாட்களுக்குப் பிறகு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். அதில், நெகட்டிவ் என முடிவு வந்தாலும், அவர் மீண்டும் அணியில் சேருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக மற்றொரு சோதனைக்கு உட்படுத்தப்படுவார். அதிலும் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அணியில் இணைய முடியும். கொரோனாவுக்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கும் வீரருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படும் என்றும் அறிகுறி இல்லாத வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Chella

Next Post

தமிழ் சினிமா துணை நடிகை வீட்டில் கணவர், மகள் கொலை! மதுவிற்கு அடிமையான மகனால் நேர்ந்த கோர சம்பவம்!

Sun Mar 19 , 2023
சென்னையைச் சார்ந்த துணை நடிகையின் மகன் அவரது தந்தை மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை அடுத்த மாங்காடு அடிசன் நகர் ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் துணை நடிகை சாந்தி. இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இவரது கணவர் பெயர் செல்வராஜ் இசை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் […]

You May Like