”டாடா” வெற்றியை தொடர்ந்து விஜய் பட நடிகையை தட்டித் தூக்கிய கவின்..!! சம்பளமும் அதிரடி உயர்வு..!!

டாடா வெற்றிக்கு பிறகு கவினின் வளர்ச்சி சினிமாவில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை முதன் முதலில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குகிறார். இந்த படத்திற்கு பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், இப்போது கவினுக்கு மிகவும் பிடித்த விஜய் பட நடிகையுடன் இணைந்து நடிக்க உள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் சதீஷ் அனிருத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவருடைய படத்திற்கு எந்தவித மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்துள்ளார்.


அனிருத்தின் இசை கவினின் சினிமா வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கேற்க கூடும். ரஜினிகாந்த், விஜய், அஜித் என பெரிய பெரிய ஜாம்பவான்களின் படங்களில் இசையமைத்துக் கொண்டிருக்கும் அனிருத், கவினே நினைத்தாலும் அவருடைய படத்தில் இசையமைக்க ஒத்துக் கொண்டிருக்க மாட்டார். அப்படி இருக்கையில் தனது 3-வது படத்திலேயே அனிருத் இசையமைப்பது உண்மையிலேயே கவினுக்கு சாதகமான செயல். இந்த படத்தில் இவருக்கு யார் ஜோடியாக நடிப்பது என யோசித்து நிலையில், அதுவும் கவினுக்கு சாதகமாக மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார்.

ரஜினியின் பேட்ட படத்தில் மூலம் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மலையாள நடிகை மாளவிகா மோகனன், அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்த பின்பு, தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இப்போது அடுத்ததாக கவினுக்கு ஜோடியாகவும் இணைந்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் சேர்ந்திருக்கும் முக்கிய பிரபலங்கள் அனைத்தும் கவினை சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பது உண்மை.

CHELLA

Next Post

டெல்லியில் மீண்டும் பயங்கரம்!பிளாஸ்டிக் பைகளை திறந்த காவல்துறைக்கு தலை, கைகள் இடுப்பு.... துண்டு துண்டாக கிடைத்த உடல் பாகங்கள்!

Sun Mar 19 , 2023
தலைநகர் டெல்லியில் பேருந்து நிலையம் அருகே இறந்த பெண் ஒருவரின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . டெல்லியில் உள்ள சாராய் காலே கான் பகுதியின் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத உடல் பாகங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்று காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் தலை கைகள் மற்றும் இடுப்பின் […]
IMG 20230319 WA0082

You May Like