உல்லாச பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ அதிரடி கைது..!! தட்டித் தூக்கியது காவல்துறை..!!

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர் அம்மாவட்டத்தின் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராகப் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரின் ஆபாச வீடியோக்கள், வாட்ஸ் அப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின. இவர் சில பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்று வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், சில பெண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.


இதுகுறித்து, பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் புகார் அளித்தார். புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். இதையடுத்து, பாதிரியாரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

CHELLA

Next Post

1000 மாணவர்களுக்கு தலா ரூ.25,000 உதவித்தொகை.. தமிழக பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..

Mon Mar 20 , 2023
குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்காக பேரவை இன்று மீண்டும் கூடியது.. திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என முதல்வர் […]
College students 1200

You May Like