நடிகை ஷகிலா 80-களின் காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் இருந்து வருகிறார். தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், மலையாளத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளாக சினிமாவில் ஆக்டிவாக இல்லாத இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மீடியாவுக்குள் வந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஷகிலா, தற்போது யூடியூபில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவருடைய காலகட்டத்தில் இருந்த நிறைய நடிகைகளிடமும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் பெண்களிடமும் பேட்டி எடுத்து வருகிறார். தற்போது ஷகிலா அவருடைய சொந்த வாழ்க்கை பற்றியும் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
இவர் எப்பொழுதும் மனதில் பட்டதை ரொம்பவும் வெளிப்படையாக பேசக்கூடியவர். தன்னுடைய கடந்த கால சினிமாவை பற்றி பேசிய போது ஒரு படத்தைப் பற்றியும், அந்த படக்குழு செய்த தவறை பற்றியும் ரொம்பவே கோபமாகவும், ஆதங்கமாகவும் பேசி இருக்கிறார். அந்த படத்தில் தன்னை தவறாக காட்டியதாகவும் சொல்லி இருக்கிறார். 70களில் ஆரம்பித்து கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய பயோ பிக் ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்னும் பெயரில் வெளியாகி இருந்தது. சில்க்கின் வாழ்க்கை கதையை பொறுத்த வரை அவருடைய மரணம் என்பது எப்போதுமே சர்ச்சைக்குள்ளானது தான். அதனால் அதைப் பற்றி பெரும்பாலும் திரைக்கதையாக சொல்ல மாட்டார்கள். ஆனால், தற்போது நடிகை ஷகிலா அந்த படத்தில் தன்னை பற்றி கூறி இருப்பதே பொய் என்று சொல்லி இருக்கிறார்.
அந்த திரைப்படத்தில் சில்க் மார்க்கெட் கொஞ்சம் சரியும் நேரத்தில் ஷகிலா அவருக்கு போட்டியாக வந்திருப்பதாக வசனமும், அது சம்மந்தப்பட்ட காட்சிகளும் வரும். ஷகிலா அதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அவர் மலையாளத்தில் முதன் முதலில் சில்க் ஸ்மிதாவுக்கு தங்கையாகவே நடித்ததாகவும், அவர்கள் இருவருக்குள் எந்த போட்டியும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். உண்மையை சொல்ல போனால் சில்க்கின் மார்க்கெட் குறைந்த ஒரு சில ஆண்டுகளுக்கு பின்பு தான் ஷகிலாவுக்கு மலையாள திரைப்பட உலகில் வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறார். தன்னை தவறாக காட்டிய அந்த படக்குழு மீது செம கோவத்தில் இருப்பதாகவும், நேரில் பார்த்தால் கண்டிப்பாக ஏதாவது கேட்டு விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார்.