fbpx

”எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வைங்க”..!! அடம்பிடித்த மாணவி..!! கண்டித்த பெற்றோர்..!! விபரீத முடிவு..!!

கோவை மாவட்டம் பீளமேடு கருப்பராயன்பாளையத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி (19) என்ற மகள் இருந்தார். இவர் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அபிராமி ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில், இதுகுறித்து அறிந்த பெற்றோர் அபிராமிக்கு அறிவுரை கூறி கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால், அபிராமி உடனடியாக திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார்.

ஆனால், படிப்பு முடியும் வரை திருமணம் செய்து வைக்க முடியாது என பெற்றோர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அபிராமி, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

’அவர்கள் விருப்பத்துடனே எல்லாம் நடந்தது’..!! கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பரபரப்பு வாக்குமூலம்..!!

Tue Mar 21 , 2023
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தை அடுத்து, பாதிரியார் தலைமறைவானார். இந்நிலையில், பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்து தொல்லை செய்ததாக புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, […]

You May Like