பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வண்ண மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மீன்வளர்த்தெடுக்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகுக்கு ஆகும் செலவின தொகை ரூ.3,00,000 ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ. 20,000 வழங்கப்பட உள்ளது. நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஒரு அலகிற்கு ஆகும் செலவின தொகை ரூ.8,00,000 ல் பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம் ரூ.3,20,000 மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60% மானியம் ரூ.4,80,000 வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட திட்டங்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற ஏதுவாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவலுக்கு 04342-296623, 3584824260 என்ற அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்.