நம்மிடையே தொழில்நுட்பம் அதிகரித்து வந்த நாட்களில் இருந்து, வானியல் தொடர்பான பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதேபோல, அவ்வபோது ஏலியன்கள் கட்டுக்கதையும் பல உலாவுகின்றன. பறக்கும் தட்டுகள் வருகின்றன. மக்களை அவர்கள் கடத்திச் சென்று ஆராய்ச்சி செய்து மீண்டும் விட்டுவிடுவார்கள் என்று பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு திரையில் காட்சிப்படுத்தப்பட்ட ஏலியன் உருவத்தை ஒத்த மர்ம நபர், வீட்டின் அருகே நின்று அங்கும் இங்கும் செல்வது போன்ற வீடியோ பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், அதில் கருத்து தெரிவிப்பவர்கள் நிர்வாண ஆசாமி இரவு நேரங்களில் மக்களுக்கு போக்கு காண்பித்து இருக்கிறார் என விமர்சித்து வருகின்றனர்.