தினமும் இரவில் தூங்குவதற்கு முன் தேனுடன் மிளகு கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய மிக பெரிய பாதிப்பு சளி, இருமல், தொண்டை வலி போன்றவை. இதிலிருந்து விடுபட எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்க கூடிய மிளகும், தேனும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. மிளகுத்தூளையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். உங்களுக்கு அடிக்கடி சளித்தொல்லை பிரச்சனை இருந்தால் இரவில் தூங்குவதற்கு முன் 1 ஸ்பூன் தேனில் அரை ஸ்பூன் மிளகு தூள் கலந்து உண்ணலாம். இதன் மூலம் சளித்தொல்லை விரைவில் குணமாகும். அடிக்கடி சிலருக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவால் நோய் ஏற்படும்.
இப்படி இருக்குமேயானால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கடாயில் சிறிது நெய்யுடன் மிளகு சேர்த்து வறுத்து, நீர் விட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை தேவைப்படும் பொழுது குடிக்கலாம். இது உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். மேலும், இது வயிற்றில் ஏற்படும் சில பாதிப்புகளுக்கும் தீர்வு கொடுக்கும். மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும். அதிக நன்மைகள் இருக்கும் மிளகு மற்றும் தேனை சாப்பிட்டு வரக்கூடிய சளித்தொல்லையிலிருந்து விடுபடுங்கள்.