தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடிகை யாஷிகா இசிஆர் அருகே நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு மார்ச் 21ஆம் தேதி நடிகை யாஷிகா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் விசாரணை ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகததால் அவருக்கு இன்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 25ஆம் தேதி யாஷிகா விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.