கேரள மாநிலம் கொச்சியில் அருகே உள்ள இடப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று விசாரணை நடத்தியதில், எம்டிஎம்ஏ போதை பொருள் அங்கு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார், அந்த வீட்டில் தங்கி இருந்த சின்னத்திரை நடிகை அஞ்சு கிருஷ்ணாவிடம் (29) விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருடன் சேர்ந்து சின்னத்திரை நடிகை அஞ்சு கிருஷ்ணா போதை பொருள் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. தற்போது நடிகை அஞ்சு கிருஷ்ணாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் சலீமை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.