உத்தரப்பிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டிகளை கொலை செய்து உடலுறவு கொண்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இது குறித்து தகவல் தெரிந்தால் காவல்நிலையத்தில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஹூன்ஹூனா கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் மூதாட்டி ஒருவரை இளைஞர்கள் இருவர் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதில், அமரேந்தர் என்பவரை கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். மேலும், அவரது கூட்டாளியான சுரேந்தர் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில், அமரேந்தரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டிகளை கொன்று உடலுறவு கொண்ட அதிர்ச்சி தகவல் அம்பலமானது. தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுரேந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.