எலான் மஸ்க்கின் கைக்கு சென்றநிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் மதிப்பு பாதியாக குறைந்துள்ளதாகவும் சுமார் 20 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை கடந்த ஆண்டு 44 பில்லியக்கு வாங்கி அதன் உரிமையாளரானார். இதனை தொடர்ந்து அவர் பல திட்டங்களை அறிவித்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பணிநீக்க நடவடிக்கைகளை எடுத்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ட்விட்டர் நிறுவனத்தை எலாம் மஸ்க் வாங்கிய நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் மதிப்பு பாதியாக குறைந்துள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், ட்விட்டர் நிறுவனம் அவருக்கு சாதகமாக எதுவுமே செயல்படவில்லை என்றும் தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் மதிப்பு 20 பில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. குறைவான மதிப்பீட்டுக்கான காரணம் டுவிட்டர் நிறுவனத்தில் தற்போது மிகக் குறைந்த ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பு 7500 பணியாளர்கள் இருந்தனர் என்றும் ஆனால் தற்போது 2000 ஊழியர்களுக்கும் குறைவாக உள்ளது என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் டுவிட்டர் நிறுவனத்தின் தற்போது விளம்பரதாரர்கள் பலர் விலகி விட்டார்கள் என்றும் இதனால் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. பல பெரிய விளம்பரதாரர்கள் விலகி விட்டதால் மிகப்பெரிய நிதி ஆதாரத்தை ட்விட்டர் இழந்துவிட்டது என தெரிய வந்துள்ளது.