fbpx

ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை..!! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு..!!

தமிழ்நாட்டில் மார்ச் 13ஆம் தேதி 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும். அக்கம்பக்கத்தினர் உடன் தேவையில்லாமல் பேசக்கூடாது. சரியான நேரத்திற்கு வர வேண்டும். அடிக்கடி வெளியே செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஆசிரியர் பணியிடங்கள்..!! வெளியானது தேர்வு முடிவுகள்..!! எப்படி தெரிந்து கொள்வது..?

Wed Mar 29 , 2023
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. கடந்தாண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான டெட் 2-ஆம் தாள் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த பிப்ரவரி 3ஆம் […]

You May Like