fbpx

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி மாற்றம்..!! ரோஹித் கிடையாது..!! இனி சூர்யகுமார் யாதவ் தான்..!!

ஐபிஎல் தொடரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஒரு சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான 16-வது ஐபிஎல் போட்டி மார்ச் 31ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இப்போட்டிகள் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் போட்டி வரும் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வரும் ஐபிஎல் போட்டிகளில் தொடர் முழுவதும் விளையாடுவார என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. வேலை பளுவை குறைக்கவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தொடர்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவும், நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஒருசில போட்டிகளில் விளையாடப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இவர், பங்கேற்காத போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

அகதிகள் முகாமில் பயங்கர தீவிபத்து..!! 40 பேர் உடல் கருகி பலியான சோகம்..!!

Wed Mar 29 , 2023
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையான சியுடாட் ஜூவாரெஜ் நகரில் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், தீ விபத்தில் […]

You May Like