தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்டமாக சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜோசன் சஞ்சய். இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய குறும்படத்தை தனது நண்பர்களுடன் இயக்கி வருகிறார். இந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இந்நிலையில், தற்போது சஞ்சய் இயக்கி வரும் இந்த குறும்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு Pull The Trigger என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.