அனைத்து கல்லூரிகளுக்கு ஒரே பாடத்திட்டம்..!! வெளியானது முக்கிய அறிவிப்பு..!!

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் அவர்களே பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்வர். மேலும், அரசு கல்லூரிகள் அரசின் பாடத்திட்டங்களை பின்பற்றுவார்கள். எனினும் முதல்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் 75 சதவீத மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு உருவாக்கி தரும் பாடத்திட்டங்களை தான் பின்பற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 25% பாடத்திட்டங்களை அந்தந்த கல்லூரிகளே வடிவமைத்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கல்லூரி இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் அரசு பாடத்திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

ரோகினி தியேட்டரில் தீண்டாமை கொடுமையா ?? பத்து தல படத்திற்கு நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு!!

Thu Mar 30 , 2023
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருந்த படம் பத்து தல. இந்தத் திரைப்படத்தை ஒபேலி கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், மானுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் இன்று வெளியாகிறது. அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு […]
IMG 20230330 WA0029

You May Like