பல்வேறு காரணங்களால் கண் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் சில எளிய பராமரிப்பு வழிமுறைகளை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.
பச்சை தக்காளியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண்பார்வை வலுப்படும். தினமும் கரிசலாங்கண்ணி சாறு அருந்திவரக் கண் பார்வைக்கு நல்லது. தேங்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணி இலையை காய்ச்சி தினமும் கூந்தலில் தேய்த்துவந்தால், கருமை நிறமாக இருக்கும். செலரிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை – 500 கிராம். இரண்டாயும் தேவையான அளவு எடுத்து ஆய்ந்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின் அதனை நன்கு உலர வைத்து இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாகக் கலக்கிக் கொள்ளவும். இதை தினமும் அதிகாலை மற்றும் மாலை இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் எடுத்து சாப்பாட்டிற்குப் பின் சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் கண்பார்வை குறைபாடுகள் நீங்கும்.
நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீக்கும். கிவி பழம், கொய்யப்பழம், மாம்பழம், திராட்சை போன்றவை சாப்பிட்டால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. தினம் ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டு வர கண்பார்வை பளிச்சிடுவதோடு மலச்சிக்கலும் தடைப்படுகிறது.கண் வியாதிகள், கண்பள் சிவப்பது முதல் கண் எரிச்சல், கண் அரிப்பு, நீர் வடிதல், பார்வை மங்குதல் மற்றும் மாலைக்கண் வியாதி இவற்றுக்கு வாகை இலைகளில் தயாராகும் தேநீர் சிறந்த தீர்வளிக்கிறது.
தினமும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது கண்களை வறட்சித் தன்மையிலிருந்து பாதுகாக்கும்.கண்களை அசைத்து 8 போட வேண்டும். இதை, தொடர்ந்து பயிற்சி செய்தாலே பார்வைக் குறைபாடு சிறிது சிறிதாக சரியாகும். வாழைப்பழ தோலை மேலும் கீழுமாகக் கண்களைச் சுற்றி மெதுவாக வட்ட வடிவில் 10 நிமிடம் மசாஜ் செய்தால் கண்கள் புத்துணர்ச்சி ஆவதுடன் கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்கும். அல்லது ஒரு ஸ்பூன் வெண்ணெய்யுடன் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து ஆரஞ்சு சாறு அரை ஸ்பூன் சேர்த்துக் கலந்து, பேக் போட்டு சிறிது நேரம் கழித்து முகம் கழுவவும். பின்பு, இதோ இடத்தில் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்து வரவும்.