’சேலையை அட்ஜஸ்ட்மெண்ட் செய்தபோது சேட்டை செய்த கேமரா மேன்’..!! வாணி போஜன் கதறல்..!!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது செங்களம் என்கிற வெப்தொடர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெப் தொடரில் ப்ரோமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்று வாணி போஜனுக்கு ஃபேன்ஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், தன்னைப்பற்றி யூடியூப்பில் பரவும் தவறான தகவல்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.


நடிகர் ஜெய்யும், வாணி போஜனும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருவதாகவும் பரவிய தகவல் குறித்தும் அந்த நேர்காணலில் வாணி போஜன் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த மாதிரி எழுதுறப்போ நான் ஜெய்யிடமே என்னது இதெல்லாம் என்று பேசினேன். ஜெய் உடன் ரிலேஷன்ஷிப் என்று எழுதி இருந்தால் கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், லிவிங் ரிலேஷன்ஷிப் அப்படின்னு எழுதுனது ரொம்ப சீப் ஆக இருந்தது. கஷ்டப்பட்டு லோன் வாங்கி வீடு கட்டி சொந்த வீட்ல இருக்கேன். இதுல வந்து யாரோ ஒருத்தரோட வீட்ல அவர் கூட லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு சொல்றது ரொம்ப சீப் ஆன விஷயம்” என கூறினார்.

நடிகை வாணி போஜன் வீட்டில் திருடிவிட்டதாகவும், அப்போது அவர் நைட்டியோடு அழுகும்படியான போட்டோவுடன் வெளிவந்த யூடியூப் வீடியோ குறித்து அவர் கூறுகையில், “என் வீட்டுக்குள்ள வர்ற அளவுக்கு எதுவுமே இல்ல. இப்போ என் வீட்ல பாஸ்வேர்டு போட்டிருக்கேன். அதனால யாரும் உள்ள வர முடியாது. திருடுற அளவுக்கு நான் யாரையும் வீட்ல வச்சிக்கல. அதில் நைட்டியோடு இருக்கும் புகைப்படம், தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் என்னை விட்டுட்டு போறப்போ அழுத சீனின் போது எடுக்கப்பட்டது. அதை எடிட் பண்ணி தான் இப்படி வீடியோ போட்டிருக்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.

திரைப்பட விழாவில் சேலை அணிந்து கலந்துகொண்டபோது, சேலையை அட்ஜஸ்மெண்ட் செய்வதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளதை பார்க்கும் போது மிகவும் கடுப்பாக இருப்பதாக வாணி போஜன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “புடவை கட்டிட்டு போகும்போது எப்படி போனாலும் பாக்குறவங்க பாக்க தான் போறாங்க. நான் பசங்களை குறை சொல்வதை விட, இந்த மாதிரி செய்யும் யூடியூபர்கள் பொறுப்பா இருக்கனும். நான் அட்ஜஸ்ட் பண்ணுனா நீ கேமராவை திருப்புறது தான் உன்னோட வேலை. ஆனா நீ நான் எப்போ அட்ஜஸ்ட் பண்ணுவேன்னு காத்திருந்து ஜூம் பண்ணி எடுக்குறது அவர்களோட தவறு தான்” என வேதனையுடன் பேசி உள்ளார்.

CHELLA

Next Post

பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு..!! வீட்டு பணியாளர்கள் மீது பரபரப்பு புகார்..!!

Fri Mar 31 , 2023
சென்னை ஆழ்வார்ப்பேட்டை அபிராமபுரம் 3-வது தெரு பகுதியில் வசித்து வருகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ். இவர் “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்”, மலரே போன்ற பல பாடல்களை பாடி பிரபலம் பெற்றவர். மாரி படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். பிரபல மூத்த திரைப்பட பாடகர் யேசுதாஸின் மகன் ஆவார். இந்நிலையில், விஜய் யேசுதாஸின் மனைவி தர்சனா வீட்டில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணவில்லை என […]
WhatsApp Image 2023 03 31 at 4.51.53 PM

You May Like