நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதனால் வடமேற்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்பத்தின் பகுதிகளில் இயல்பான வெப்பநிலைக்குக் குறைவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியா ஆகிய இடங்களில் இந்த மாதங்களில் சாதாரண வெப்ப அலை நாட்களை விட அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில், 10 மாநிலங்கள் கடுமையான வெப்பநிலை மாற்றங்களை அனுபவிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.. அதாவது இந்த 10 மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..
வெப்பநிலை அதிகமாக இருக்கும் மாநிலங்கள்
- பீகார்
- ஜார்கண்ட்
- உத்தரப் பிரதேசம்
- ஒடிசா
- மேற்கு வங்காளம்
- சத்தீஸ்கர்
- மகாராஷ்டிரா
- குஜராத்
- பஞ்சாப்
- ஹரியானா
மேலும், ஏப்ரல் மாதத்தில் சராசரி மழைப்பொழிவு நாடு முழுவதும் இயல்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.. வடமேற்கு, மத்திய, தீபகற்ப இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதேசமயம் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதம் வழக்கத்தை விட வெப்பமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்தாலும், மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் உண்மையில் முன்னறிவிப்புக்கு ஏற்ப இருந்தன. இருப்பினும், மார்ச் மாதத்தின் பிற்பகுதியில், வெப்பநிலை இயல்பை விட குறைவாக பதிவு செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளது..