இந்த நவீன யுகத்தில் பல தனித்துவமான பழக்கவழக்கங்களை ஒரு சிலர் பின்பற்றி வருகின்றனர்.. அந்த வகையில், ஆப்பிரிக்காவின் ஹிம்பா பழங்குடியினரிடையே இதுபோன்ற பல வித்தியாசமான மரபுகள் பின்பற்றப்படுகின்றன. இந்த மக்கள் பல ஆச்சர்யமான பழக்கங்களை தற்போதும் பின்பற்றி வருகின்றன.. ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் குனேன் மாகாணத்தில் ஹிம்பா பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இது உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றாகும். ஹிம்பா பழங்குடியினரில் மக்களை ஆச்சரியப்படுத்தும் பல மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..

ஹிம்பா பழங்குடியின பெண்கள் ஒரு நாள் மட்டுமே குளிப்பார்கள், அதுவும் அவர்களது திருமண நாளில் மட்டும் தான். கடுமையான பாலைவன காலநிலை மற்றும் குடிநீரின் பற்றாக்குறை ஆகியவை காரணமாக இந்த பழங்குடியினர் குளிப்பதற்கு சிரமப்படுகின்றனர். அங்கு தண்ணீர் இல்லாததால் இந்த பழக்கத்தை பின்பற்றுகின்றனர்.. வாழ்நாள் முழுவதும் குளிக்காவிட்டாலும், இந்த பெண்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசாது. இதற்காக, ஒரு சிறப்பு எண்ணெயை அந்த பெண்கள் பயன்படுத்துகிறார்களாம். இந்த எண்ணெய் சூரிய ஒளியில் இருந்து பெண்களை பாதுகாக்கிறது. மேலும் ஹிம்பா பழங்குடியின பெண்கள் மூலிகைகளின் எண்ணெயையும் தங்கள் உடலில் தேய்த்து கொள்வார்களாம்.. அவர்கள் மூலிகை புகைகளையும் பயன்படுத்தி உடலை சுத்தப்படுத்தி கொள்வார்களாம்..
ஹிம்பா பழங்குடியினரின் ஆண்கள் பல பெண்களுடன் உறவு வைத்து கொள்ளலாம்.. மேலும் இங்குள்ள ஆண்கள், தங்கள் மனைவியுடன் விருந்தினர்களை உடலுறவு கொள்ள அனுமதிக்கின்றனர். மரியாதை நிமித்தமாக இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.. அந்த நேரத்தில், அந்த கணவர் வேறு அறையில் அல்லது வீட்டிற்கு வெளியே தூங்குவாராம். ஹிம்பா பழங்குடியினரில் உள்ள ஆண்களும் பெண்களும் மற்றவர்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமண உறவுகளை வைத்திருக்கும் சுதந்திரம் உள்ளது. ஹிம்பா பழங்குடியின பெண்கள் ஆப்பிரிக்காவில் மிகவும் அழகான பெண்களாக கருதப்படுகிறார்கள். நமீபியாவில் சுமார் 50,000 ஹிம்பா பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது..