fbpx

மக்களே கவனம்..!! மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!! இந்த மாவட்டத்தில் தான் அதிகமா..?

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. இதில், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளால், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினர். பலர் இன்னும் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் ஒரு நாளில் 3,796 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 172 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு 35,97,118 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 909 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 99 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 52 பேரும், செங்கல்பட்டில் 17, சேலம் 16, கோவை 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Chella

Next Post

மீண்டும் பீதியை கிளப்பியும் கொரோனா..!! திரையரங்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

Mon Apr 3 , 2023
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு போடப்படுமோ என்கிற பயமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு சற்று ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளும் […]

You May Like