fbpx

’லியோ’ படப்பிடிப்பில் இணையும் கமல்ஹாசன்..!! LCU-க்கு பிளான் போட்ட லோகேஷ்..!!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லியோ படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் கேட்காமலேயே வெளியாகிறது. சமீபத்தில் கூட, விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் ‘லியோ ஒரு பக்கா ஆக்ஷன் படம்’ என கூறினார். காஷ்மீரில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், சென்னையில் துவங்கவுள்ள லியோ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பகத் பாசில் இப்படத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனும் இணைய போகிறார் என்ற தகவலால், LCU-வில் லியோ கண்டிப்பாக இருக்கிறது என ரசிகர்கள் உறுதிசெய்து இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.

Chella

Next Post

’முத்தம் கொடுத்தால் நடிக்க வாய்ப்பு’..!! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட்..!! பரபரப்பு பேட்டி

Mon Apr 3 , 2023
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார் VJ தீபிகா. அவர் ஏற்கனவே அந்த தொடரில் நடித்து பாதியில் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது உடைந்து எல்லோரும் தனித்தனியாக சென்றுவிட்டனர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஐஸ்வர்யா கதாபாத்திரம் தான். தற்போது, தீபிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிக்க வந்த புதிதில் சந்தித்த casting […]
’முத்தம் கொடுத்தால் நடிக்க வாய்ப்பு’..!! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட்..!! பரபரப்பு பேட்டி

You May Like