சம்மரில் பார்ட்னருடன் ஹேப்பியா இருக்கனுமா?… இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!… இதய கோளாறு, புற்றுநோய் பிரச்சனைக்கும் தீர்வு!

கோடைக்கால சீசன் மாம்பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.


கோடை காலத்தில் வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வகையில் அதற்கு ஏற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். கோடைக்காலம் தொடங்கியதுமே மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். சாலையோரங்கள் மற்றும் மார்க்கெட்டுகளில் கண்ணை பறிக்கும் வகையில் குவியல் குவியலாக மாம்பழங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். இதனை சாப்பிடுவதால் இதயம், புற்றுநோய் செரிமான பிரச்சனை மற்றும் விந்தணு உற்பத்தி வரை பெரிதும் உதவுகிறது. மாம்பழங்களுக்கு வயிற்று சுத்திகரிப்பு பண்புகள் உள்ளதால், செரிமான பிரச்சினைகளை போக்கும். உண்மையில் இவை சிறந்த மற்றும் இயற்கையான மலமிளக்கியாகவும் விளங்குகிறது. அதனால் மாம்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாது.

இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உட்கொள்வது இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். உண்மையில், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மாம்பழத்தில் நிறைந்துள்ள நியூட்ராசூட்டிகல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மாம்பழம் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. மாம்பழத்தின் பழத்தின் சாறில் கரோட்டினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், டெர்பெனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவையெல்லாம் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போரிட்டு அதன் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. பாலுணர்வுக்கான கூறுகள் உள்ள மாம்பழம், தம்பதிகளிடையே உடலுறவுக்கான விருப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், மாம்பழங்களில் உள்ள வைட்டமின்-E மற்றும் பீட்டா கரோட்டின் கலவையானது விந்து அழிவைத் தடுக்கிறது.

KOKILA

Next Post

உடல்நிலை, மனநிலை பிரச்சனைகளில் இருந்து விடுபட!... இதையெல்லாம் ஃபாளோ பண்ணுங்க!... சம்மர் டிப்ஸ் உங்களுக்காக!

Tue Apr 4 , 2023
கோடையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் பல நோய்களும் நம்மை தாக்குகிறது. இதில் இருந்து விடுபட சம்மர் டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஆண்டின் மற்ற பருவங்களை விட கோடை காலத்தில் பல நோய்கள் ஏற்படும்.அடிக்கும் வெயிலுக்கு சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்கள் சரும செல்களை சேதப்படுத்துவதால் சன்பர்ன் என்ற பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது, தோல் சிவந்து போதல், […]
241c70d0aa7ece315317877f64b16af6e9c0e8091e8b61bef4dfa45af364b659

You May Like