fbpx

தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை நாளைக்கு மழை..? வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 6 முதல் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

'பொது இடங்களில் முக்கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும்': மருத்துவ நிபுணர் கருத்து..

Tue Apr 4 , 2023
கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. இதனால் பல மாநிலங்கள் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.. குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து கோவிட் பணிக்குழு உறுப்பினரும், லான்செட் கமிஷன் உறுப்பினருமான டாக்டர் சுனீலா கார்க் பேசினார்.. அப்போது பேசிய அவர் “XBB 1.15 & XBB 1.16 ஆகியவை ஒமிக்ரானின் துணை வகைகளாகும். […]

You May Like