திரைப்படங்களில் நடித்தவர்களை கடந்து நெடுந்தொடர்கள் அளிப்பவர்களுக்கு தான் தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. ஆகவே சினிமா என்ற ஆசைப்படும் பலரும் முதலில் சின்னத்திரையில் தான் காலடி எடுத்து வைக்கிறார்கள்.
அப்படி பல தொடர்களில் கதாநாயகியாக நடித்து பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனு. கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் என்ற தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், பல வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமானார். பல போட்டோ ஷூட் கூட வெளியிடப்பட்டிருந்தது. சமீபத்தில் தான் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தன்னுடைய மகனுக்கு வான்வியன் என்று பெயர் வைத்திருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்திருக்கிறார்.