சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களா நீங்கள்?… அப்போ இதை முதல்ல படிங்க!.. கவனத்தில் கொள்வது அவசியம்!

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் தற்போது காணலாம்.


தினமும் போதுமான அளவிற்கு உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தசைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கிரகித்து தேவையான சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.அதிக அளவு கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்சுலின் செயல்பாடு மிக மோசமாகிவிடும். இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவு மிகவும் அதிக அளவு அதிகரித்துவிடும். அதனால் இந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. இனிப்பு வகைகள் சாப்பிட ஏற்றது இல்லை.

உடல் எடையை எப்பொழுதும் சீரான அளவில் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இது ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.. மேலும் அதிக அளவு சர்க்கரை சிறுநீர் வழியே வெளியேறி விடும்.

மன அழுத்தம் அதிகமாக இருக்கும்பொழுது கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும்.இந்த ஹார்மோன்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் அதிகப்படுத்தி விடும்.அதனால் எப்பொழுதும் நிலையான மனதோடு மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம்.தேவையான அளவு தூக்கம் மிகவும் முக்கியம். சரியான தூக்கம் உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால் ஹார்மோன்கள் சீரற்ற அளவு சுரக்கத் தொடங்கும். இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியாது. அதனால் தூக்கத்தை தவிர்க்க வேண்டாம்.

KOKILA

Next Post

அடுத்த ஆபத்து.. தீவிர மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் டிக் வைரஸ்.. நிபுணர்கள் எச்சரிக்கை..

Thu Apr 6 , 2023
தீவிர மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய டிக் வைரஸ் பாதிப்பு இங்கிலாந்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. சிறிய பூச்சி போன்று இருக்கும் உண்ணிகள் அதிக மரங்கள் அல்லது புல்வெளி பகுதிகளில் வாழ்கின்றன. அந்த பகுதிகள் வழியாக நடந்தால், அவை உங்கள் தோலுடன் ஒட்டிக்கொண்டு உங்கள் இரத்தத்தை உண்ணலாம். பெரும்பாலான உண்ணிகள் நோயைச் சுமக்கவில்லை என்றாலும், சில உண்ணிகள் தீவிர நோய்களை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. இந்த சூழலில் உண்ணிகள் […]
skynews ticks virus 6111291 1

You May Like