fbpx

கோடைக்காலம்!… வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்!… நுங்கு சர்பத் ரெசிபி!…

கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நுங்கு சர்பத் ரெசிபி குறித்து இதில் பார்க்கலாம்.

கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைக்க நீரேற்றம் அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுவகைகளை எடுத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. மேலும், உடல் சூடு காரணமாக வயிற்றுப்போக்கு, வயிறு கடுப்பு, நீர் கடுப்பு போன்ற பிரச்சனைகள் அதிகளவில் சிலர் அவதியடைவார்கள். இதனை தடுக்க சுவையாகவும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும் நுங்கு சர்பத் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

நுங்கு சர்பத் செய்ய தேவையான பொருட்கள்: நுங்கு தோலுடன் 4 பீஸ். நன்னாரி சர்பத் – 2 ஸ்பூன், ஐஸ் க்யூப்ஸ் – 2, சிறிதளவு ஐஸ்வாட்டர். செய்முறை: ஒரு கிளாஸில் நுங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும், அதனுடன் நன்னாரி சர்பத் 2 ஸ்பூன் சேர்த்து ஐஸ் க்யூப்ஸ் 2, ஐஸ்வாட்டரை சேர்த்து கலக்கினால் சுவையான நுங்கு சர்பத் ரெடி ஆகிவிடும்.

Kokila

Next Post

குட்நியூஸ்.. எரிவாயு விலை நிர்ணயம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

Fri Apr 7 , 2023
இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.. பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இதில் இயற்கை எரிவாயு, சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் வரும் சமையல் எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்த உச்சவரம்பு விலையை விதித்தது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் “ இயற்கை எரிவாயு, அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா […]

You May Like