fbpx

கல்யாணமாகி 26 வருஷம் ஆச்சு..!! இன்னும் அது இல்லை..!! கணவரை தூக்கில் தொங்கவிட்ட மனைவி..!!

புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன் (வயது 52). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி எழிலரசி (வயது 48). இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. எனவே, எழிலரசி தனது உறவினர் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி தேதி லோகநாதன், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி எழிலரசி அளித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார், தற்கொலை பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, லோகநாதன் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி அரசு மருத்துவமனை போலீசாரிடம் வழங்கியது. அந்த அறிக்கையில், லோகநாதன் கொலை செய்யப்பட்டதற்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்திருந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கணவரை மனைவியே கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது அம்பலமானது. குழந்தை இல்லாத விரக்தியில் மதுபழக்கத்துக்கு அடிமையான லோகநாதன், தினமும் குடித்துவிட்டு எழிலரசியை சித்ரவதை செய்துள்ளார். சம்பவத்தன்றும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த எழிலரசி, கணவரின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த எழிலரசி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று நினைத்து, பின்னர் கயிற்றால் தூக்கு மாட்டி கணவரின் உடலை தொங்க விட்டு தற்கொலை நாடகமாடி உள்ளார். பிறகு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, எழிலரசியை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

100- க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்...! ஹரியானா அரசு உத்தரவு...!

Sun Apr 9 , 2023
இந்தியாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஹரியானா அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கையில், “ஏப்ரல் 3 ஆம் தேதி ஹரியானாவின் சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே வைரஸ் பாதிப்பை கட்டுபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. […]

You May Like