பல உடல் பிரச்சினைகளுக்கு மருந்தாக அமையும் ஊதா நிற லாவண்டர் எண்ணெய் எவ்விதமான தலைவலி பிரச்சனைக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.
நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவை தான். பல வகையான எண்ணெய் வகைகள் இருப்பினும், பலரும் அறிந்திராத ஒரு எண்ணெய் வகையைப் பற்றித் தான் இந்தப் பதிவில் காணப் போகிறோம். அழகிய ஊதா நிறத்தில் பல்வேறு நன்மைகளை கொண்ட லாவெண்டர் எண்ணெய் பற்றி கேள்விப்பட்டதுண்டா ? ஆனால் லாவண்டர் எண்ணெய் பல உடல் பிரச்சினைகளுக்கு மருந்தாக அமைகிறது. தற்போது அனைவருக்கும் தலைவலி பிரச்சினை ஏற்படுகிறது. அதற்கு காரணம் போதிய ஓய்வில்லாமல் வேலை செய்வது, தேவையில்லாமல் டென்ஷனாவது, வேலையில் அதிக பணி சுமை ஆகிய பல விஷயங்கள் காரணமாக உள்ளது. இதனால் தலைவலியை போக்க அடிக்கடி மாத்திரை போடும் தவறான பழக்கத்தை பலர் வைத்துள்ளனர். இப்படி அடிக்கடி மாத்திரை போடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படும். அதற்கு பதிலாக தலைவலி ஏற்படும் போது லாவண்டர் எண்ணெயில் ஒரு சொட்டு எடுத்து நெற்றியில் தேய்த்து கொண்டால், வலி விரைவில் நீங்கும்.
பலர் தற்போது உட்கார்ந்தபடியே பல மணி நேரங்களுக்கு அலுவலக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். மேலும் நீண்ட நேரம் பைக்கில் பயணம் செய்கிறார்கள், தினமும் சிறிதளவு கூட உடற்பயிற்சி செய்வதில்லை. இதனால் பலருக்கும் முதுகு வலி ஏற்படுகிறது. அப்பொழுது லாவண்டர் எண்ணெய்யை தடவினால் முதுகு வலி நீங்கும். மேலும் மாசு நிறைந்த இடத்திலும், வெயிலிலும் பயணம் செய்வதால் பருக்கள் ஏற்படுகிறது. இதனால் முகத்தை சுத்தப்படுத்த லாவெண்டர் எண்ணெய்யை Moisturizer-யுடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் மிருதுவாக இருக்கும். பருக்கள் வராது. பலர் தற்போது தூக்கம் இல்லாமல் அவதிப்படும் நிலையில் உறங்குவதற்கு முன்பு தலைனையின் இருபுறமும் இரண்டு சொட்டு லாவண்டர் எண்ணெயை விட்டு உறங்கினால் நன்றாக தூக்கம் வரும்.