பிரிட்டன் நாட்டின் தென்மேற்கு லண்டன் பகுதியைச் சேர்ந்தவர் லாரன் வால் (34). இவர் தனது 19 வயதில் அதாவது 2004ஆம் ஆண்டில் பால் வைட் என்ற இளைஞருடன் டேட்டிங் செய்து, காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இருவருக்கும் குழந்தை பிறந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். பெண் லாரனின் தாயார் ஜூலி மகளுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின்னர் தேன் நிலவு செல்ல லாரன் மற்றும் பால் தம்பதி முடிவெடுத்தனர். அப்போது லாரனின் தாயார் தனியாக இருந்ததால், அவரையும் தேன் நிலவுக்கு உடன் அழைத்து செல்லலாம் என தம்பதி முடிவெடுத்தனர்.
இந்த தேனிலவின் போது ஜோடியுடன் மாமியார் ஜூலியும் பார்ட்டி செய்துள்ளார். பார்ட்டிக்கு பின்னர் போதையில் மாப்பிள்ளை பால் மற்றும் ஜூலி இடையே தவறுதலாக உடல் உறவு நிகழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மகள் லாரனுக்கு முதலில் தெரியவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர் தாய் ஜூலி கர்ப்பமான இருந்த நிலையில், இந்த செய்தி மகள் லாரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அத்துடன், அந்த கர்ப்பத்திற்கு காரணம் தனது கணவர் பால் தான் என்பது பேரிடியாக விழுந்தது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான லாரன், தனது கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார். இந்நிலையில், தாய் ஜூலியும் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், ஜூலியும் பால் வைட்டும் திருமணம் செய்வதாக முடிவெடுத்து அதை மகள் லாரனுக்கு தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பால் மற்றும் லாரனுக்கு 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14இல் திருமணமான நிலையில், முன்னாள் கணவர் பால் மற்றும் தாய் ஜூலிக்கு ஆகஸ்ட் 15, 2009இல் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து பெரும் ஆதங்கத்துடன் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள லாரன், எனது தாயை என்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. ஒரு தாய் தனது மகளுக்கு இது போன்ற ஒரு மோசத்தை செய்ய முடியாது என்றுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.