துக்க நிகழ்ச்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்..!! அடித்துக் கொன்று மண்ணில் புதைத்த கொடூரம்..!!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே முல்லை வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் திருமாவளவன் (24). இவர் கும்பகோணத்தில் அறுவடை இயந்திரம் ஓட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கும்பகோணத்துக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். ஆனால், அன்று இரவில் இருந்து திருமாவளவன் வீட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லாமல் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து வீட்டில் இருந்தவர்களும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


இந்நிலையில், நேற்று முன்தினம் திருமாவளவனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை அறிந்து, அவரது அறுவடை இயந்திர உரிமையாளரிடம் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். அதில், திருமாவளவன் வேலைக்கு வரவில்லை என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவனின் தந்தை ஆசீர்வாதம் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, முல்லைவாசல் மதகடி அருகே மணல் லாரியில் மணல் ஏற்றி வந்த நபர்கள், மனித உடல் ஒன்று புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை தோண்டி எடுத்துப் பார்த்ததில் திருமாவளவனின் உடல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைச் சம்பவம் எதனால் நடந்தது என்பது குறித்து நீடாமங்கலம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமாவளவனின் நண்பர் ஸ்ரீதர் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHELLA

Next Post

வராஹ ரூபம் பாடலை திரையரங்குகள், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களில் பயன்படுத்த முடியாது - கேரள நீதிமன்றம் தீர்ப்பு

Sat Apr 15 , 2023
காந்தாரா படத்தின் வராஹ ரூபம் பாடலை திரையரங்குகளிலும் OTT மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பயன்படுத்த தடை விதித்து கேரள நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு வெளியான காந்தாரத் திரைப்படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.. இதனிடையே அப்படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் பாடல், நவரசம் என்ற பாடலை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதை தொடர்ந்து, நவரசம் பாடலின் காப்புரிமையை வைத்திருக்கும் தைக்குடம் […]
63226b45556246f88858d700601be393d4f80bd68a2df128a7a5da224710fa55

You May Like