காந்தாரா படத்தின் வராஹ ரூபம் பாடலை திரையரங்குகளிலும் OTT மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பயன்படுத்த தடை விதித்து கேரள நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2022-ம் ஆண்டு வெளியான காந்தாரத் திரைப்படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.. இதனிடையே அப்படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் பாடல், நவரசம் என்ற பாடலை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதை தொடர்ந்து, நவரசம் பாடலின் காப்புரிமையை வைத்திருக்கும் தைக்குடம் இசைக்குழுவினர் கேரள நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு தொடர்ந்தனர்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வராஹ ரூபம் பாடலை அமேசான், யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப தடை விதித்தது.. மேலும் இந்த பாடலுக்கு தடைகோரிய தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவினரிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.. ஆனால் உரிய ஆவணங்களை அந்த இசைக்குழுவினர் வழங்காததால் வராஹ ரூபம் பாடலுக்கான தடையை நீதிமன்றம் நீக்கியது..
இந்த நிலையில் கடந்த வாரம், கோழிக்கோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட், வழக்கின் நாட்குறிப்பை ஆய்வு செய்த பின்னர், பதிப்புரிமைச் சட்டம் 1957 (பதிப்புரிமை மீறல்) பிரிவு 64ன் கீழ் – திருட்டு பாடல் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் முன்னேற்ற அறிக்கையை மே 4-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டார்..
அதுமட்டுமின்றி வராஹ ரூபம் பாடலை திரையரங்குகளிலும் OTT மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பயன்படுத்த தடை விதித்து கேரள நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்று மாத்ருபூமி நிறுவனம் புகார் அளித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி, கேரள உயர் நீதிமன்றம் காந்தாரத்தில் உள்ள வராஹ ரூபம் பாடல் நவரசத்தின் திருட்டு பதிப்பு என்று கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..