fbpx

கல்லூரியில் கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவி..!! கதவை உடைத்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படிக்கும் மாணவி கருச்சிதைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், ”நெல்லூர் மாவட்டம் மரிபாடு மண்டலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். இம்மாதம் 11ஆம் தேதி அனைத்து மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் வகுப்பிற்கு வெளியே இருந்தனர். வகுப்பறையில் யாரும் இல்லை. அப்போது வகுப்பில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். கதவு உள்ளே பூட்டியிருந்தது. நீண்ட நேரமாகியும் வெளிவரவில்லை. பின்னர், மாணவிகள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, இளம்பெண் வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லூர் ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உண்மையில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதா அல்லது யூடியூப் பார்த்து கருச்சிதைவு செய்ய முயன்றாரா என்பது குறித்த தகவல்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். படித்து, நல்ல வேலையில் இருந்து, மகள் எங்களைப் பார்த்துக் கொள்வாள் என்று நினைத்த பெற்றோருக்கு, இந்த மரணம் இடி விழுந்ததது போல் ஆகியுள்ளது. வகுப்பறையில் ஏன் இப்படி செய்தார் ? அவர் கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியுமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணின் செல்போன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அவருக்கு ஆனந்தசாகரின் கார் டிரைவரை தெரியும் என்பது தெரியவந்துள்ளது. மாவட்ட அளவில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக நெல்லூர் ரூரல் சிஐ சீனிவாசலு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

Chennai Metro Rail Recruitment 2023..!! மாதம் ரூ.1,50,000 வரை சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

Sun Apr 16 , 2023
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் (CMRL-Chennai Metro Rail Limited) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 4. அதிகபட்ச வயது வரம்பு 30 முதல் 47 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.1,50,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் […]

You May Like