நாம் தினமும் சாப்பிடும் சில உணவுகளாலும் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. அதுவும் தற்போது நிறைய பேர் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளை தினந்தோறும் தங்களின் உணவில் சேர்த்து வருகிறார்கள். சர்க்கரை நோயை வரவைக்கும் குறிப்பிட்ட சில உணவுகளை தினமும் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
சாதத்தை தினமும் அதிகளவில் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரைஅளவை அதிகரித்து விடும். ஏனெனில் சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம். எனவே உடலுக்கு போதுமான உழைப்பு இல்லாமல், தினமும் மூன்று வேளையும் சாதத்தை உட்கொண்டு வந்தால், அது சர்க்கரை நோயை விரைவில்வர வழைத்துவிடும். அனைத்து பருவங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் தான் வாழைப்பழம்.
என்ன தான் வாழைப்பழம் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய சத்தான பழமாக இருந்தாலும், வாழைப்பழத்தில் தேனிற்கு இணையான கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. இந்த வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, இதில் உள்ள இயற்கை சர்க்கரை இரத்த சர்க்கரை அளவில் இடையூறை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும்.
மேற்கத்திய நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் மக்களின் காலை உணவாக பிரட் விளங்குகிறது. நிறைய பேர் காலை வேளையில் பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து, அதன் மேல் வெண்ணெய் தடவி அல்லது முட்டைகள் அல்லது காய்கறிகளை வைத்து சாண்விட்ச் தயாரித்து சாப்பிடுகிறார்கள். ஆனால் வெள்ளை பிரட்டுகளானது மைதாவால் ஆனது.
மைதா உணவுகள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடியது. எனவே நீங்களும் பிரட்டுகளை தினமும் உட்கொண்டு வந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் வர நிறைய வாய்ப்புள்ளது. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை பானங்கள் அல்லது சோடா பானங்களை தெரியாமலும் குடிக்கக்கூடாது. ஏனெனில் இந்த பானங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏராளமான அளவில் உள்ளன மற்றும் இவற்றில் எவ்வித சத்துக்களும் இல்லை. எனவே இந்த சோடா பானங்களை ஒருவர் அடிக்கடி வாங்கி குடித்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கக்கூடியவை. எனவே, வயது அதிகரிக்கும் போது, உருளைக்கிழங்குகளை தினமும் உணவில் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் சர்க்கரை நோயால் அவதிப்பட நேரிடும்.