சௌரவ் கங்குலி- விராட் கோலி இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் Unfollow செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு எம் சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி கடந்த 15 ஆம் தேதி நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி விராட் கோலியின் பொறுப்பான அரைசதத்தால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணி பேட்டிங் ஆடிய போது அந்த அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் மற்றும் அமன் கான் ஆகியோர் அடித்த பந்தை கேட்ச் பிடித்த விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். அதுமட்டுமின்றி வெளியில் அமர்ந்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி உள்பட அங்கு அமர்ந்திருப்பவர்களை வம்பிழுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அங்கு டேவிட் வார்னர், ரிக்கி பாண்டிங், சவுரங் கங்குலி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அதோடு, அவர்களை முறைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து போட்டிக்கு பிறகு, கங்குலியும், விராட் கோலியும் கை கொடுத்து கொள்ளாமல் போனார்கள். மேலும் கோலி ரசிகர்கள், இந்திய அணியின் ஜாம்பவனாக இருந்த கங்குலியை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த நிலையில், சவுரங் கங்குலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி Unfollow செய்துள்ளார். கங்குலி டெல்லி கேப்பிட்டல்ஸின் ‘கிரிக்கெட் இயக்குனராக’ இருக்கிறார். அதேபோல விராட் கோலி பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார்.
கங்குலி மீது கோலி கோபப்படுவதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கிறது. கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது கோலி கேப்டன் பதவியை இழந்தார். இதுவே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக இருவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் கங்குலியை அன்ஃபாலோ செய்தார் கோலி, தற்போது கங்குலியும் கோலியை அன்ஃபாலோ செய்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் கங்குலிக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர் 106 பேரைப் பின்தொடர்கிறார். இவர்களில் கோலி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோலி இன்ஸ்டாகிராமில் 246 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். 276 பேர் பின்தொடர்கின்றனர். அவர்களில் கங்குலி இல்லை. இதிலிருந்து இருவருக்குள்ளும் வேறுபாடுகள் இருப்பது தெளிவாகிறது.