வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் புதினா, வெள்ளரி சர்பத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து உடல் சூட்டை தணிக்கும் வகையில் மக்கள் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் பானங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டுவருகின்றனர். அந்தவகையில் கோடை வெயிலில் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் புதினா, வெள்ளர் சர்பத்தை வீட்டிலேயே எப்பது செய்வது என்பது குறித்து பார்க்காலம். இதற்கு தேவையான பொருட்கள் : தண்ணீர், சர்க்கரை, புதினா இலை, வினீகர், வெள்ளரிக்காய், சோடா, ஐஸ் கட்டிகள்.
செய்முறை: முதலில் ஒரு கடாயில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு புதினா இலைகள் சேர்த்து மீண்டும் 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதன் பின், சிறிது வினீகர் சேர்த்து கொஞ்சம் கட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.கொதித்த உடன் வடிக்கட்டி ஆற விடவும்.அதன் பிறகு, வெள்ளரிக்காய் எடுத்து தோள் உறித்து துருவி கொள்ளவும்.இறுதியாக க்ளாஸில் முதலில் துறுவிய வெள்ளரிக்காய், புதினா, சர்க்கரை சிரப் சேர்த்து அதனுடன் சோட அல்லது தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். ஐஸ் சேர்த்து பருக தயாராகி விட்டது, புதினா, வெள்ளரி சர்பத்.