கோடைகால பயணத்தின் போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில தோல் பராமரிப்பு குறிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
கோடைகாலம் தொடங்கி விட்டாலே வாட்டும் வெயிலின் தாக்கத்திற்கு பயந்து பலரும் வெளியில் செல்வதற்கு சற்று தயங்குவதுண்டு. ஏனென்றால் வெளியில் செல்லும்போது உடல் ஆரோக்கியம் மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்ற அச்சத்திலேயே பலரும் வெளியில் செல்வதற்கு தயங்குவர். அந்த வகையில் கோடைகால பயணத்தின் போது கட்டாயம் பின்பற்ற வேண்டிய சில தோல் பராமரிப்பு குறிப்புகள் பற்றி பார்ப்போம். நீங்கள் வீட்டில் இருக்கும்போதோ அல்லது வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தாலோ, உங்கள் சருமத்தை பராமரிக்க தினமும் காலையிலும், இரவிலும் மென்மையான ஃபேஸ் வாஷ் மூலம் சுத்தம் செய்வது அவசியமாகும். இதனால் சருமத்தில் சேரக்கூடிய தூசுகளை அகற்ற உதவுவதோடு, சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பது மிகவும் அவசியம். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், Clinique’s Moisture Surge போன்ற ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும், உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், Cetaphil இன் மாய்ஸ்சரைசிங் கிரீம் போன்ற கனமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.கோடையில் குறைவான மேக்கப் போடுவது நல்லது. ஏன்னென்றால் அதிகப்படியான மேக்கப் வெயில் களங்களில் அலட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உங்கள் உதடுகளை பளபளப்பாக வைத்துக் கொள்ள லிப் பாம்களை எப்போதும் தடவிக் கொள்ளுங்கள்.
கோடை காலங்களில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும். உங்களால் முடிந்த வரை எங்கு சென்றாலும், ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள், மேலும் 30 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதோடு நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.