fbpx

வீடு வாங்க திட்டமிட்டுள்ளீர்களா..? இனி குறைந்த விலையில் வாங்கலாம்..!! வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

நம் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று நாம் அனைவரும் கனவு காண்கிறோம். ஒரு வீட்டை வாங்குவது ஒரு பெரிய சாதனை. ஆனால், அதற்கு நிறைய ஆராய்ச்சி மற்றும் பொறுமை தேவை. ஒரு வீட்டில் முதலீடு செய்யும் போது ஒருவர் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக இது ஒரு வாழ்நாள் முடிவாகும். அதை மாற்ற முடியாது. உதாரணமாக, உங்கள் கார் வாங்குவதில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், நீங்கள் அதை மாற்றலாம், ஆனால் ஒரு வீட்டை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. சொத்து வாங்குவதில் அக்கறை, விடாமுயற்சி மற்றும் விடாமுயற்சி தேவை.

இந்நிலையில், இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகள் சார்பில் வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்வதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கிய பிறகு உரிய முறையில் கடனை செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த சொத்துக்கள் மார்க்கெட் விலையை விட குறைந்த விலையில் ஏலத்தில் விற்பனை செய்யப்படும். இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் சேர்ந்து தற்போது சொத்துக்கள் மற்றும் வீடுகளை ஏலத்தில் விடுவதற்கு புதிய செயலியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்த செயலி (e-auction app) மூலம் சொத்து பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆன்லைன் செயலியில் சொத்துக்கள் குறித்த ஆரம்ப விலை மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவைகள் இருக்கும். இவற்றை வாடிக்கையாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய செயலி மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் ஏலங்களை நடத்துவதற்கும், அதன் மூலம் குறைந்தது 6 லட்சம் சொத்துகளையாவது விற்பனை செய்ய வேண்டும் எனவும் பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளது.

Chella

Next Post

ஹேப்பி நியூஸ்..!! தமிழ்நாடு ரேஷன் கடைகளில் மே 10ஆம் தேதி முதல்..!! வந்தாச்சு சூப்பர் வசதி..!!

Fri Apr 28 , 2023
தமிழகத்தை பொறுத்தவரை 38 மாவட்டங்களில் 34,792 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகின்றன. ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேரக் கடைகள் 9,388 ஆகவும், ஆயிரம் முதல் 1,500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டைகளுக்கு மலிவு […]

You May Like