fbpx

’பாக்கியலட்சுமி’யில் இருந்து விலகிய கோபி..!! அவருக்கு பதில் இவரா..? ரசிகர்கள் ஷாக்..!!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இதில், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலட்சுமி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ், இளைய மருமகள் அமிர்தாவாக ரித்திகா தமிழ்செல்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு முன்னாள் காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளும் கோபி, நடிப்பில் அசால்ட்டாக ஸ்கோர் செய்து வருகிறார். இந்நிலையில், கோபியாக நடித்து வந்த சதீஷ், பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மற்றொரு நடிகரும் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகியிருக்கிறார். கோபியின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், தற்போது விலகியிருக்கிறார். அவருக்கு பதில் நடிகர் அரவிந்த் தற்போது அந்த ரோலில் நடிக்கிறார். ‘அவருக்கு பதில் இவர்’ என முந்தைய எபிசோடில் குறிப்பிட்டு, அரவிந்தின் காட்சி ஒளிபரப்பானது.

இந்நிலையில், கோபியாக நடித்த சதீஷ் விலகியதால், அவருக்கு பதில் கடைசியாக சன் தொலைக்காட்சியில் முடிந்த கண்ணான கண்ணே தொடரில் நடித்திருந்த ப்ருத்விராஜ் கோபியாக பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என்பது தெரியவில்லை.

Chella

Next Post

25 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த கணவன் - மனைவி..!! உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு..!!

Fri Apr 28 , 2023
விவாகரத்து கோரி பல வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு வருவதை நாம் அறிந்திருப்போம். 25 ஆண்டுகளாகப் பிரிந்தே இருந்த தம்பதியினர், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். அந்த வருடமே கருவுற்ற அப்பெண், கருவைக் கலைத்ததாகவும், தன் கணவர் வீடு சிறியதாக இருப்பதை அப்பெண் விரும்பவில்லை எனவும், […]

You May Like