fbpx

காலை தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காஃபி குடிப்பவரா நீங்கள்..? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!!

நம்மில் பலரும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தூங்கி எழுந்தவுடன் காஃபி குடித்தால் தான் அவர்கள் ஃபிரெஷ்ஷாக உணர்வார்கள். ஆனால், காலை எழுந்தவுடன் வேறு எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல், நேரடியாக காஃபி குடிப்பது சில பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். சமீபத்தில் நடிகை நேஹா ஷர்மா கூட, தனது நாளை ஒரு கப் காஃபியுடன் தொடங்கும் “கெட்ட பழக்கம்” இருந்ததாக வெளிப்படுத்தினார். இந்த பழக்கத்தை சமீபத்தில் தான் கைவிட்டதாகவும், தற்போது தனது நாளை வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையுடன் தொடங்கி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது நல்ல டீடாக்ஸ் பானமாக இருப்பதாகவும், இதனை குடிப்பதால் எனது சருமம் சுத்தமாகி தன்னை அழகாக வைக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நெஞ்செரிச்சல்:

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதால் நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்பட கூடியது நெஞ்செரிச்சல். இது மேல்-மார்பு மற்றும் நடு மார்பில் எரிச்சலுடன் கூடிய வலி அல்லது அசௌகரியம் ஏற்படுவதை குறிக்கிறது. காஃபி வயிற்றில் அமில உற்பத்தியை தடுக்கிறது. இது உங்கள் வயிற்றின் pH அளவைக் குறைக்கும். காஃபியை பாலுடன் சேர்த்து குடித்தாலோ அல்லது ஏற்கனவே உங்கள் வயிற்றில் உணவு இருந்தாலோ, வயிற்றில் உற்பத்தியாகும் அமில அளவு குறையாது. Stomach lining-ற்கு லோ pH லெவல் பெரியளவில் சிக்கல் இல்லை என்றாலும், Esophagus lining-ற்கு சிக்கலை ஏற்படுத்த கூடும்.

காஃபி மற்றும் கார்டிசோல் அளவுகள் :

காலை எழுந்தவுடன் காஃபி குடிப்பது என்பது உடலுக்கு நன்மையை விட தீமையை விளைவிக்கும். ஆராய்ச்சியின் படி, நாள் ஒன்றுக்கு 3 முறை கார்டிசோல் உற்பத்தி உச்சத்தில் இருக்கும். அதன் அடிப்படையில், தூங்கி எழுந்த பிறகு ஒரு மணி நேரத்தில் நம் உடலில் கார்டிசோலின் உற்பத்தி அதிகமாக இருக்கும். மன அழுத்தத்தை அதிகரிப்பதில் கார்டிசோல் முக்கிய பங்கு வகிக்கிறது. கார்டிசோல் அதிகம் சுரக்காமல் பராமரிப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம்.

பொதுவாக காஃபியில் இருக்கும் Caffeine கார்டிசோல் லெவலை உயர்த்துகிறது. காலை நேரத்தில் உங்கள் உடல் ஏற்கனவே உச்சகட்ட கார்டிசோல் ஹார்மோனை உற்பத்தி செய்து கொண்டிருக்கும். அப்போது நீங்கள் வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது, அதன் உற்பத்தி மிக அதிகம் என நினைத்து கார்டிசோல் அளவை குறைக்க கற்று கொடுக்கும். இது காஃபிக்கான டாலரன்சை மேம்படுத்தும், அதாவது நீங்கள் அதே அளவு விழிப்புணர்வோடு இருக்க நீங்கள் அதிக அளவு காஃபின் குடிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

குடல் இயக்கங்கள்:

சீரான டயட்டுடன் காஃபி எடுத்து கொள்வது பெருங்குடலைத் தூண்டி, குடலின் சீரான தன்மையை மேம்படுத்த உதவுவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. இருப்பினும் வயிற்றில் உணவு ஏதும் இல்லாமல் முதலில் காஃபியை குடித்தால் நீங்கள் விரும்பாத நேரத்தில் அல்லது எதிர்பார்க்காத சமயங்களில் குடல் தீவிரமாக தூண்டப்பட்டு, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்.

எப்போது காஃபி குடிக்கலாம்..?

காலை தூங்கி எழுந்த பிறகு ஒரு மணி நேரம் கழித்து காஃபி அல்லது டீ குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உணவுக்குழாயில் ஏற்படும் பாதிப்பை குறைக்க பிளாக் காஃபிக்கு பதில் பாலுடன் சேர்த்து குடிக்கலாம். காலை எழுந்தவுடன் சோர்வாக இருப்பதை போல உணர்ந்தால், போதுமான அளவு தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த உணர்வுக்கு நீரிழப்பு காரணமாக இருக்கலாம். எனவே, காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அதிக ஆற்றலாக உணர உதவும்.

Chella

Next Post

சிக்சர் மழை பொழிந்த லக்னோ!... கடைசிவரை போராடி தோற்ற பஞ்சாப்!... ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிக ஸ்கோர் இதுதான்!

Sat Apr 29 , 2023
பஞ்சாப் அணியை வீழ்த்தி 56 ரன்கள் வித்தியாசத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றிபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 16வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் […]

You May Like