fbpx

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றிற்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல் ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்தது.

இந்நிலையில், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, மே 7 ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#Jobs: BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மொத்தம் 475 காலியிடங்கள்...! விண்ணப்பிக்க 20-ம் தேதி கடைசி நாள்…!

Thu May 4 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Engineer-I , Trainee Engineer– I பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 471 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 64 வயதிற்குள் இருக்க […]

You May Like