fbpx

இளம் பருவ காதலை நீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது!… டெல்லி உயர்நீதிமன்றம்!

இளம் பருவ காதலை நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் ஜாமீன் நிராகரிக்கும்போதும் அல்லது ஜாமீன் வழங்கும்போதும் நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் போக்ஸோ வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவண காந்தா சர்மா, இளமைப் பருவக் காதலை” நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது. போக்ஸோ வழக்குகளில் ஜாமீன் மறுப்பதா அல்லது வழங்குவதா என்பதைத் தீர்மானிக்கும் போது நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.மேலும் இந்த வழக்கில் பேசிய நீதிபதி, இந்த வழக்கின் மொத்த கதையும் ஒரு ரொமாண்டிக் நாவல் போலவும் திரைப்படம் போலவும் இருக்கிறது. தங்களின் உறவை ஏதோவொரு வகையில் இச்சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இருவரும் விரும்பியிருக்கின்றனர்.

அவர்களுக்கு வந்த ஒரே யோசனை குழந்தை பெற்றுக் கொள்வதுதான். இத்தகைய காதல் கதைகளை இந்த நாட்டின் சட்டம் ஆதரிக்காது எனத் தெரியாத மகிழ்ச்சி நிறைந்த அப்பாவியாக இளம்பெண் இருக்கிறார். குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இளைஞர் அமைதியான வாழ்க்கை வாழ டெல்லியிலிருந்து 2200 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். போலிஸாரோ அல்லது குடும்பத்தினரோ தாங்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதைத் தடுக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இவர்களது செல்போன் எண்கள் அணைக்காததால் எந்தவொரு குற்ற நோக்கத்திற்கும் எந்த ஆதாரமும் இல்லை. காதலுக்கு நிச்சயமாகக் காதலிப்பதற்கான வயது ஒப்புதல் குறித்து எல்லாம் புரியாது. டீன் ஏஜ் காதல் காரணமாக அப்பாவி இளையோரைச் சிறையிலடைப்பது அவர்களுக்கு அழுத்தத்தையும் உளவியல் சிக்கல்களையும் தரும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் காதல் ஜோடியில் இளம்பெண் கர்ப்பமுற்றதால் அவரது பெற்றோர் இளைஞர் மீது கொடுத்த போக்சோ வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Kokila

Next Post

இந்தியாவில் நடக்கும் அனைத்து மோசடி சம்பவங்களில் 57% பிளாட்ஃபார்ம் மோசடிகள்!... PwC இந்தியா அறிக்கை!

Sat May 13 , 2023
இந்தியாவில் நடக்கும் அனைத்து மோசடி சம்பவங்களில் 57% பிளாட்ஃபார்ம் மோசடிகள் என்று PwC இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. பிளாட்ஃபார்ம் மோசடி என்பது பொருளாதாரக் குற்றத்தின் ஒரு புதிய வடிவமாகும், இது சமூக ஊடகங்கள், இணையவழி, நிறுவன மற்றும் ஃபின்டெக் தளங்களுடன் தொடர்புடைய மோசடி நடவடிக்கைகளை உள்ளடக்கியது. PwC ஆலோசகரின் புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் நடக்கும் அனைத்து மோசடி சம்பவங்களில் 57% பிளாட்ஃபார்ம் மோசடி மற்றும் 26% க்கும் அதிகமான இந்திய […]

You May Like