fbpx

பிளஸ்2 மாணவர்களே..!! மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், மாணவர்கள் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ”விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 13ஆம் தேதி (இன்று) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்: ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275/-

மறுகூட்டல்-I (Re-totalling-I) கட்டணம் : உயிரியல் பாடத்திற்கு மட்டும் – ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ.205/-

பணம் செலுத்தும் முறை: தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் : விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.

Chella

Next Post

உங்கள் குழந்தை ஏதாவது கேட்டால் ’நோ’ சொல்லும் பெற்றோரா நீங்கள்..? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!!

Sat May 13 , 2023
இன்றைய கால கட்டத்தில் தங்களது குழந்தை எல்லாவற்றிலுமே சிறந்து விளங்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசையாக இருக்கிறது. அதேபோல கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும், விரும்பியதெல்லாம் நடக்க வேண்டும் என்பது பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பைப் பொறுத்த வரை குழந்தைகள் என்ன கேட்டாலும் Yes என்று சொல்லும் பெற்றோர் மற்றும் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லும் பெற்றோர் என்று 2 வகையாக இருக்கின்றனர். பாலிவுட் நடிகை மற்றும் […]

You May Like