தன்னைத் தனியாக ரூமுக்கு வா, சரக்கடிக்கலாம் என்று தயாரிப்பாளர் அசித் குமார் அழைத்ததாகவும், அவரது அழைப்பை ஏற்காததால், அதன் பின்னர் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் பிரபல நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி, கடந்த 2008 முதல் சாப் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிவி தொடரில் நடித்து வருவதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தார். இந்நிலையில், அந்த தொடரின் தயாரிப்பாளர் அசித் குமார் மோடி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தொடர்ந்து தொல்லை தருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் அடிக்கடி ஆபாசமாக பேசுவது, அந்தரங்க இடங்களில் தவறாக தொடுவது என தொடர்ந்து எல்லை மீறினார் என புகாரில் தெரிவித்துள்ளார்.