பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுகம் நிலையான வைப்புத்தொகை திட்டத்தை திருத்தம் செய்து புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
சுகம் நிலையான வைப்புத்தொகை திட்டம் என்பது, இந்த தொகையில் கணக்கு வைத்திருப்பவர்கள், முதிர்ச்சியின் போது தங்கள் FD-களை தானாக புதுப்பிப்பதை கட்டாயப்படுத்தியவர்கள், எஃப்டிகளுக்கு இருக்கும் அதே வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். இருப்பினும், திட்டத்தில் திருத்தம் காரணமாக, முதிர்வு நேரத்தில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள தொகை, வங்கியின் தனி நிலையான வைப்புத்தொகை திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும்” எனவும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட தொகையை சில வங்கிகளுக்கு அபராதமாக செலுத்த வேண்டும். ஆனால் சில வங்கிகள் மட்டும் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதியை அபராதம் இல்லாமல் வழங்குகிறது.அந்த வகையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் சுகம் நிலையான வாய்ப்புத் தொகை மூலம் தற்போது முன்கூட்டியே அபராதம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்காக வழங்கியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் 10 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யும் நிலையில் எஃப்டி கணக்குகளுக்கு இருக்கும் அதே வட்டி தொகையை இதில் பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் முதிர்வு நேரத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் தனிநிலையான பைப்பு தொகை திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும்.