கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பது குறித்து காங்கிரஸ் இன்னும் ஆலோசித்து வருவதால், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூருவில் இன்று அடுத்த முதல்வர் யார் என்பதை அறிவிப்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு கார்கே தனது இறுதி முடிவை இன்று அறிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு பெங்களூருவிலேயே வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா முதல் இரண்டரை ஆண்டுகளும், டி.கே.சிவகுமார் அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.