fbpx

7 குழந்தைகளை பெற்றால் ரூ.1 கோடி பரிசு!… மக்கள் தொகையை அதிகரிக்க சீனா புதிய திட்டம்!

மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் 7 குழந்தைகளை பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு 1 கோடி ரூபாய் பரிசு (இந்திய மதிப்பில் சுமார் 1200000 ரூபாய்) வழங்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரானா பாதிப்பால் அங்கு மக்கள் தொகை வெகுவாக குறைந்தது. இந்த பாதிப்பால் சீனா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களை சந்தித்தது. அந்தவகையில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் புதிய அறிவிப்பை சீன அரசு வெளியிட்டுள்ளது. அதில், குறைந்து வரும் மக்கள் தொகையை அதிகரிக்க “நியூ இரா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 7 குழந்தைகள் பெற்றால் சமூக ஆதரவாக 150000 டாலர் வழங்கப்படவுள்ளதாம். இதை சீனாவில் முதலில் 20 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் காதல் விடுமுறை, திருமண உதவித் தொகை, மூன்றாவது குழந்தை பிறந்தால் ஊக்கத் தொகை போன்ற பல திட்டங்களை சீனாவின் குடும்ப கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.

Kokila

Next Post

திக்! திக்!... பந்துவீச்சில் மிரட்டிய பஞ்சாப்!... கடைசி ஓவரில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

Sat May 20 , 2023
ஐபிஎல் தொடரின் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி ஓவர் வரை சென்று த்ரில் வெற்றிபெற்றது. 16-வது ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் […]

You May Like